இலங்கையின் எரிபொருள் நெருக்கடியால் இலாபமடையும் இந்திய விமான நிலையங்கள்
இலங்கையில் இருந்து மேலும் நான்கு சர்வதேச விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை எரிபொருள் நிரப்புவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெல்போர்ன் சிட்னி மற்றும் பாரிஸுக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் மூன்று விமானங்களும் ஷார்ஜாவிற்கு சென்ற ஏர் அரேபியா விமானம் ஆகியவையே திருவனந்தபுரத்தில் எரிபொருளை நிரப்பியுள்ளன.
தரையிறக்கப்படும் விமானங்கள்
இந்தநிலையில் கடந்த மே 27 முதல் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து 204 விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த தரையிறக்கம் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தரையிறங்கும் கட்டணமாக மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது எரிபொருள் நிரப்பும் வருவாயை தவிர்ந்த வருவாயாகும் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொச்சி விமான நிலையம்
இதேவேளை அண்மைக்காலத்தில் கொழும்பில் இருந்து செல்லும் விமானங்கள் தொழில்நுட்ப தேவைகளுக்காகவும்
எரிபொருள் நிரப்புவதற்காகவும் கொச்சி விமான நிலையத்தையும்
பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
