இலங்கை வரவுள்ள இந்தியாவின் ஆறு விமானங்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
விவசாயத்திற்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தியாவின் நேனோ நைட்ரஜன் பசளையை இலங்கைக்கு கொண்டு வர இந்திய விமானப்படை இணங்கியுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda aluthgamage) தெரிவித்துள்ளார்.
கண்டி கன்னோருவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கப்பல் மூலம் கொண்டு வர தாதமாகும் என்பதால், விமானம் மூலமாக இந்த பசளைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ளன. இதற்மைய பசளையை ஏற்றிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் இன்று இலங்கை வரவுள்ளன.
நைட்ரஜன் பசளையை அதிகளவில் பலன் தரும் வகையில் பயன்படுத்த முடியும். சேதனப் பசளையை மாத்திரம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் முதல் மற்றும் ஒரே நாடாக இலங்கை மாற்றப்படும். முதல் கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் அறுவடை குறைந்தால், இழப்பீடு வழங்கப்படும்.
பூஞ்சை அல்லது வேறு கிருமிகளால் அறுவடைக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள ஒரு தொகை கிருமி நாசனிகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளேன் எனவும் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri