ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த இந்திய விமானப்படை தளபதி
இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்றைய தினம் (03.05.2023) இடம்பெற்றுள்ளது.
இந்திய விமானப்படைத் தளபதி தனது விஜயத்தின் போது, இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்
இதேவேளை, இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரியிலும், இந்திய விமானப்படைத் தளபதி உரை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரனவின் அழைப்பின் பேரில், சௌதரி தற்போது 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள தொழில்முறை உறவுகள் மற்றும்
பரஸ்பர ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேம்படுத்தும் என்று இலங்கை பாதுகாப்பு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.










மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
