ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே இந்திய ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படும் : அலி சப்ரி திட்டவட்டம்
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (10.08.2023) இடம்பெற்ற உடையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறியதாவது,
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
இது தொடர்பான அணைத்து நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் தேவைப்பட்டால் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம்.
அதற்கு எந்த தடையும் இல்லை. அவை அனைத்தும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள்.
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 2030-ல் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 2050-ல் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றின் கைதிகளாக இருக்காதீர்கள்
இலங்கையில் பல சிறப்புத் தேவைகள் உள்ளன. சவால்களை சமாளித்து, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றின் கைதிகளாக இருக்காதீர்கள்.
புதிய வழியில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நம் நாட்டை மேம்படுத்துங்கள். நாட்டுக்கு நட்டம் ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம்.
நாம் கண்களை மூடிக்கொண்டு இவற்றைச் செய்வதில்லை. நம் நாட்டின் நலன் மட்டுமே எங்களிடம் உள்ளது. எமது வெளிவிவகாரக் கொள்கை ‘இலங்கைக்கு முதலில்’ என்பதை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.
இந்த தேவைகளை நிர்வகிப்பதற்கு நாங்கள் வேலை செய்கிறோம்." என தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
