அண்டை நாடான இலங்கைக்கு தொடர்ந்தும் உதவப்போவதாக இந்தியா அறிவிப்பு!
மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ள இலங்கைக்கு, “அண்டை நாடுகளுக்கு முதலில்” என்ற கொள்கையின்படி சிரமங்களிலிருந்து மீள்வதற்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்றும், இந்திய அரசாங்கம், இலங்கை தேசத்தின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பொருளாதார நிலைமையைத் தணிக்க உதவும் வகையில், கடந்த இரண்டு மூன்று மாதங்களில் 2.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இதில் எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள் உள்ளடங்கும் என்றும் பாக்சி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் பொதுவான தன்மை மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட நிலையில் இந்தியாவின்; ஒத்துழைப்பு வழங்கப்;பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நிலையில் பாரிய எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது என்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி குறிப்பிட்டுள்ளார்.