இந்தியா சீனாவின் வருகைக்கு நாமல் பாராட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்திய மற்றும் சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) கூறியுள்ளார்.
எனினும் எதிர் தரப்பில் அவர்கள் இருந்தபோது இவ்வாறான ஒப்பச்தங்களை “ஊழல்” என விமர்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவை பாராட்டி அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
முந்தைய ஆட்சி
“முந்தைய ஆட்சியில் இந்த சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியபோது, தேசிய மக்கள் சக்தி தரப்பே இந்த நிறுவனங்களை சர்ச்சைக்குரியவை மற்றும் ஊழல் நிறைந்தவை என்று மகுடம் சூட்டியது.
எனினும் தற்போது, தேசிய மக்கள் சக்தி அதன் சொந்த வார்த்தைகளை விழுங்கி, அவர்களுடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அவர்கள் ஏன் எதிர்த்தார்கள்? இந்திய மற்றும் சீன நிறுவனங்களின் நற்பெயருக்கு அவர்கள் ஏன் களங்கம் விளைவித்தார்கள்? என்பதை ஜனாதிபதி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |