உலக கிண்ண கிரிக்கெட்: வலுவான நிலையில் இந்திய அணி
புதிய இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகின்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்படி இலங்கை அணிக்கு 358 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இன்று (02.11.2023) பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா முன்னிலை
உலக கிண்ணத் தொடரில் இந்தியா அணி பங்கேற்ற 6 ஆட்டங்களில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை வென்று தொடரில் தோல்வி அடையாத அணியாக 12 புள்ளிகளுடன் முன்னிலை வகித்து வருகின்றது.
எனினும், இலங்கை அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி பெற்றதுடன் 4 தோல்வி அடைந்து 4 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.