இந்திய அணிக்கு எதிரான போட்டியை வென்ற இளம் பாகிஸ்தான் அணி
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் 50 ஓவர்கள் கிரிக்கட்டின் நேற்றைய போட்டி ஒன்றில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி தமது 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 287 ஓட்டங்களை பெற்றது.
இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உஸ்மான் கான் 60 ஓட்டங்களையும், சாஹைப்கான் 147 பந்துகளில் 159 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தியாவின் பந்துவீச்சு
எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய அணி சார்பாக அதிகப்பட்சமாக நிகில் குமார் 77 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
