180 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா: சீரான துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா
சுற்றுலா இந்திய (India) அணிக்கும் அவுஸ்திரேலிய (Australia) அணிக்கும் இடையிலான போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டில் ஆரம்பமானது.
இந்தப்போட்டி பகல் இரவு ஆட்டமாக இடம்பெறுகிறது.
இந்தநிலையில், போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.
[HZPLVDT
பந்து வீச்சு
இதில் அதிக ஒட்டங்களாக 42 ஓட்டங்களை நித்திஸ்குமார் ரெட்டி பெற்றுக்கொடுத்தார். அணித் தலைவர் ரோஹித் சர்மா, 3 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க் 48 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து, துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, ஆட்ட நேர முடிவின் போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில் நேதன் மெக்சீவினி ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும், மானஸ் லபுஸ்சேன் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |