இந்தியாவை பொலோ ஒன்னில் இருந்து காப்பாற்றிய பும்ரா- தீபக்
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய(Australia) அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(17) நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பொலோ ஒன் முறை
முன்னதாக அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய இந்திய அணி ஒருக்கட்டத்தில் 3 விக்கட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எனினும் கே எல் ராகுல்(K.L.Rahul) மற்றும் ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) ஆகியோரின் துடுப்பாட்டம், இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவியது.
அதிலும், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான பொலோ ஒன் முறையை தவிர்ப்பதில், இறுதி விக்கட்டுக்காக துடுப்பாடிய பும்ராவும், ஆகாஸ் தீபக்கும் முக்கிய பங்கை வகித்தனர்.
இதன்படி பும்ரா(Bumra) ஆட்டமிழக்காமல், 10 ஓட்டங்களையும், தீபக் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இறுதி நாள் ஆட்டம்
தமது இந்த துடுப்பாட்டத்தின்போது, இருவரும் தலா ஒரு ஆறு ஓட்டங்களை பெற்று 10 வது விக்கட்டுக்காக இரண்டு ஆறு ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளை(18) நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |