இந்தியாவின் ஒப்புதல்களை ரணில் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்: மனோ எம்.பி வலியுறுத்து
இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் இன்று(21.07.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில், "மாகாணசபை தேர்தல், இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கு இந்திய ரூபா 75 கோடி ஒதுக்கீடு" ஆகியவை, இந்திய பயணத்தில் பிரதமர் மோடி, எமது ஜனாதிபதிக்கு சொல்லி அனுப்பிய செய்திகளாகும்.
தமிழருக்கு முழுமையான தீர்வு
இவை இரண்டையும் வெறும் கட்சி அரசியல், இனவாத அரசியல் ஆகியவற்றுக்கு அப்பால், நாட்டின் அரசியல் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவற்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
எனினும், இவை எதுவும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழருக்கும், மலையக தமிழருக்கும் முழுமையான தீர்வுகளை தந்து விடப்போவதில்லை.
ஆனால், இவற்றை செய்தாவது இலங்கை அரசு தனது நேர்மையை பறைசாற்ற வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம்
இலங்கையில் துன்புற்று வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு எப்போதும் தார்மீக கடப்பாடு உண்டு.
1964ன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1987ன் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்ட பொறுப்பும் உண்டு.
அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைதான் இலங்கை அரசாங்கத்திடம் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
