வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு உதவி வழங்கவுள்ள இந்திய அரசாங்கம் (Photos)
வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை செய்யும் என யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் ராகேஸ் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சிறிய நடுத்தர வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவை பொறுத்தவரை சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் 40 வீதமான பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பை செய்கின்றார்கள்.அது மட்டுமன்றி வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இவர்களே முன்நிலையில் உள்ளார்கள்.
அவ்வாறா நிலையில் இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் தமது உற்பத்தியின் தரத்தை மேப்படுத்த வேண்டும்.
அதற்கான உதவிகளை இந்தியா செய்ய முடியும். பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும்.
விற்பனை காட்சிக் கூடங்கள்
இந்த கண்காட்சியில் 140 மேற்பட்ட விற்பனை காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன. இவை இன்னும் கவர்சிகரமாக இருக்கும் போது இந்தியாவிற்கோ ஐரோப்பாவிற்கோ ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்.
இத்தகைய கண்காட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொடர்பாடல்கள் அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

