கனேடிய தூதரக அதிகாரிகள் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்தியா
இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் நடந்துவரும் நிலையில், 40 கனட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 10ஆம் திகதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் தவறினால் அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
மொத்தம் 62 கனட அதிகாரிகள் இந்தியாவில் உள்ள நிலையில் அவர்களது எண்ணிக்கையை 41ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய- கனடா உறவில் விரிசல்
இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த(18.06.2023) ஆம் திகதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது.
இந்நிலையில், தற்போது 40 கனட அதிகாரிகளை இந்தியா வெளியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியமை மேலும் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அரசு இதுகுறித்து தற்போது வரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri