இந்தியாவின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர்
இந்தியாவின்(India) தெலுங்கானா- நாகர்கர்னூல்(Nagarkurnool) மாவட்டத்தில், சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்றையதினம்(22) இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் சிக்கியிருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் சுரங்கப்பாதையிலேயே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளது.
சுரங்கப்பாதை அனர்த்தம்
இதனையடுத்து, நீர்ப்பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனம் ஒன்றின் இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை மதிப்பிடுவதற்காக சுரங்கப்பாதைக்குள் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்தக்குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
சம்பவத்தின் போது 50 தொழிலாளர்கள் அந்த சுரங்கத்துக்குள் இருந்தனர், எனினும் சுமார் 43 பேர் பாதுகாப்பாக வெளியே வந்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தை அடுத்து மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |