இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தமிழ்நாடு - தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட நபர் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள்
இதனால் அவர் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்தவர் என்றும் அவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்து உறுதிப்படுத்த இலங்கை அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இராமேஸ்வரம் - தனுஷ்கோடி ,அரிச்சல்முனை கடற்கரையோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளினாலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டினர் 1946 r/w 3 (a) 6 (a) இந்தியாவுக்குள் நுழைதல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை இராமேஸ்வரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உச்சகட்ட பதற்ற நிலையில் யுத்தகளம்.....! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்: ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |