இந்தியாவுடனான பயணக்குமிழி இடை நிறுத்தப்படவில்லை - பிரசன்ன ரணதுங்க
இந்தியாவுடனான (எயார் பபுல்) பயணக் குமிழி இடை நிறுத்தப்படவில்லை என்றும், ஏப்ரல் 26 அன்று குஷினகருக்குத் திட்டமிடப்பட்ட விமானம் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால் பயணக் குமிழி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் எயார்; பபுல் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள குஷினகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கையில் இருந்து ஒரு விமானத்தை அங்கு தரையிறக்குவதற்கு திட்டமிடப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் குஷினகர் விமான நிலையத்தில் தரையிறங்கும் முதல் சர்வதேச விமானமாக இலங்கை விமானம் இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பதை கருத்தில்
கொண்டு விமானப்பயணத்தை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்
பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.
