இந்தியா, இலங்கையின் மிகவும் நம்பகமான நட்பு நாடு: சந்தோஸ் ஜா வலியுறுத்து
இந்தியா, இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இந்தியா - இலங்கை பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது கருத்தரங்கின் போது உயர்ஸ்தானிகர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை உறவு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு விரிவடைந்து, பன்முகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் தேசிய திறன்களால் இது வலுப்பெற்றுள்ளது.

உட்கட்டமைப்பு, இணைப்பு, ஆழமான பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம், முதலீடு, கலாசாரம், கல்வி, சுற்றுலா மற்றும் பல்வேறு துறைகளில் இப்போது ஒத்துழைப்பு நீடிக்கிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது ஒரு விருப்பம் மட்டுமல்ல. அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் ஒரு தேவையாகும்.

இந்தநிலையில் இலங்கையின் ஆயுதப் படைகளது தேவைகளை ஆதரிப்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது” என சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri