இந்தியா மற்றும் இலங்கை உறவு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது : ரணில்
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையின் அபிவிருத்தி குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (11.02.2023) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த கலாசார மையமானது பொதுவான கலாசார மையமாகவே இருகின்றது.

இலங்கை மற்றும் இந்திய உறவு
இந்திய, இலங்கை உறவு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது.
தமிழ் மக்களின் சுதந்திரத்தை மையப்படுத்தியே 75ஆவது சுதந்திர தின நிழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் ஒரு அங்கமே இந்த கலாசார மையம் மக்களுக்கும் வழங்கும் நிகழ்வானது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை மையப்படுத்தியே ஹிக்கடுவையிலுள்ள பௌத்த தேரரும் அதனை முன்னெடுத்திருந்தார்.

தமிழ் மக்களின் கலாசார
ஆறுமுகநாவலர் முன்னெடுத்திருந்த பணிகளிலிருந்து சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.
இந்தக் கலாசார மண்டபம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. தமிழ் மக்களின் கலாசார மத்திய நிலையமாக இது விளங்கவேண்டும்.
இதற்கு ‘சரஸ்வதி மண்டபம்’ எனப் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை 'இலங்கையின் நூற்றாண்டிற்கு இன்னும் 25' எனும் தொனிப் பொருளில் யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர நிகழ்வுகளின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனப் பேரணியை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.
இதன்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அரசியல் தலைவர்கள், படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
புகைப்படங்கள்-தீபன்






