ராமர் சேது பாலத்தின் விரிவான வரைபடத்தை வெளியிட்ட இஸ்ரோ
தெய்வீக, நீரில் மூழ்கியதாக கூறப்படும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைப் பாலமான ராமர் சேது இணைப்பின் விரிவான வரைபடம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாசாவின் கதிரியக்க மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் இதனை வெளியிட்டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாசாவின் (நெசனல் ஏரோநோட்டிக்ஸ் ஸ்பேஸ் எட்மினிஸ்ட்ரேன்) ICE - Sat - 2 செயற்கைக்கோளின் உதவியுடன் ராமர் சேது அல்லது ஆதாம் பாலத்தின் விரிவான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
தரவு சேகரிப்பு
ஒளியியல் செயற்கைகோள் புகைப்படம் (Optical satellite image) இன் சரிபார்ப்பின் படி, குறித்த பாலம் 99.8 சதவீதம் நீரில் மூழ்கியுள்ளது.
இந்தப் பாலம் 29 மீற்றர் நீளமும், எட்டு மீற்றர் கடற்பரப்பு அளவிலும் நீண்டுள்ளது.
வெளியிடப்பட்ட இந்த வரைபடம் 10 மீற்றர் தெளிவுத்திறன் கொண்டதுடன் ஆறு வருடங்களாக தரவுகள் சேகரிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட வரைபடமாகும்.
இதற்கமைய வெளியான தகவலின்படி, பாலம் 1.5 கிமீ அகலம் கொண்டதாக கூறப்படுகிறது.
பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்
குறித்த வரைபடம், அமெரிக்க செயற்கைக்கோள் ICE-Sat-2 இன், மேம்பட்ட கதிரியக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கைக் கோள் மூலம், 40 மீற்றர் ஆழம் வரையிலான கடற்பரப்பைக் கண்டறிந்து ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது.
முன்னதாக, செயற்கைக்கோள் அடிப்படையிலான அவதானிப்புகள் கடலுக்கடியிலான கட்டமைப்பை மாத்திரம் வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |