இந்தியா - இலங்கை தொழில்துறையை மேம்படுத்த தனித்தனி தேசிய திட்டம்
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் தேயிலை மற்றும் கோப்பி தொழில்துறையை மேம்படுத்த தனித்தனி தேசிய திட்டங்களைப் புதுப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வேல்ட் டீ செய்தித்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள முக்கிய மாநிலமான அஸ்ஸாமின் தேயிலைத்துறையில் கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது.
தேயிலை
இதன்படி புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைப்புத்திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பகுதி விவசாயப் பொருட்களுக்கான உலகளாவிய சந்தையில் ஒரு பெரிய இடத்தை பெற முடியும் என்று இந்திய அரசாங்கம் கருதுகிறது.
கோப்பி
இதேவேளை, இலங்கையில் தேசிய தேயிலை மற்றும் கோப்பி தொழில்துறைக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியில், கொழும்பைத் தளமாகக் கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கியை மையப்படுத்தி முன்னெடுப்பாவதாக வேல்ட்டீ செய்தித்தளம் கூறுகிறது.
இதன்படி, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர
நிறுவனங்களுக்குக் கடன் வரியை வழங்குவதே இலக்காக உள்ளதாக வேல்ட்டீ செய்தித்தளம்
குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
