இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தப்படும் இந்தியா
இலங்கையுடனான உறவில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான அதிகபட்ச ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (11.08.2023) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி பாண்டே ஆகியோருக்கு இடையில் இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றிருந்தது.
விசேட கலந்துரையாடல்
குறித்த நிகழ்வில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் விகாஸ் சூத், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் புனித் சுஷில் உள்ளிட்ட இந்திய தூதர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
