இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: பும்ராவின் அதிர்ச்சி அறிவிப்பு
2025 ஜூன் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று(24) அறிவிக்கப்படவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது அமையவுள்ளது.
பாதமான அறிவிப்பு
எனினும், இந்த போட்டிகள் தொடர்பில் இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பாதமான அறிவிப்பு ஒன்றை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உடல் தகுதி 3 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் தாக்குபிடிக்காது என்று, அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அறிவித்துள்ளார்.
இந்திய அணி
மொஹமட் சமியும் பந்து வீச்சுக்கான உடல் தகுதி காரணமாக இங்கிலாந்து சுற்றுலாவில் பங்கேற்கமாட்டார் என்ற நிலையில், பும்ராவின் அறிவிப்பு, இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவரை மாத்திரம் நம்பி இங்கிலாந்துக்கு செல்வதா, இல்லையா என்பது குறித்து தேர்வுக் குழு குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பும்ரா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினார், எனினும், ஐந்தாவது மற்றும் இறுதி ஆட்டத்தின் போது அவரது முதுகில் உபாதை ஏற்பட்டது, இதன் பின்னர் அவர் ஓய்வில் இருந்து வந்தார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 12 நிமிடங்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
