வெளிநாடுகளிலுள்ள ஆபத்தான இலங்கையர்களை தேடும் அநுர அரசு
வௌிநாடுகளில் பதுங்கியுள்ள ஆபத்தானவர்களான 20 இலங்கையைர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்களை கைது செய்வதற்கான சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த 20 பேரும் தலைமறைவாகியுள்ள நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு
வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 11 பேர் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
