ஓய்வை அறிவித்த அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) பிரிஸ்பேனில் அஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததை அடுத்து, அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவுடன் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
38 வயதான அஸ்வின் 106 ஆட்டங்களில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
𝙏𝙝𝙖𝙣𝙠 𝙔𝙤𝙪 𝘼𝙨𝙝𝙬𝙞𝙣 🫡
— BCCI (@BCCI) December 18, 2024
A name synonymous with mastery, wizardry, brilliance, and innovation 👏👏
The ace spinner and #TeamIndia's invaluable all-rounder announces his retirement from international cricket.
Congratulations on a legendary career, @ashwinravi99 ❤️ pic.twitter.com/swSwcP3QXA
அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) அடுத்ததாக, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |