வெற்றிக்குறியுடன் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தியுள்ள நியூஸிலாந்து
வெற்றிக்குறியுடன் உள்ள நியூஸிலாந்தை அணியை தோற்கடித்து ஆறுதல் வெற்றியை பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.
இதன்படி போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் முடிவின்போது, இங்கிலாந்து அணி, இரண்டு விக்கட்டுக்களை இழந்து 18 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக, நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற 347 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில், 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இமாலய இலக்கு
இதனையடுத்து, துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இரண்டாம் இன்னிங்ஸில் 600க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தநிலையில் நியூஸிலாந்தின் வெற்றிக்கான குறியின் மத்தியில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் இங்கிலாந்து அணியின் கையிலேயே பாரிய தோல்வியை தவிர்க்கக்கூடிய திறமை தங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |