13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறையாகும்: கஜேந்திரகுமார்
13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை தமிழ்க்கட்சிகள் இடைக்கால தீர்வாக கருதவேண்டும் என்ற கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்திருந்த ஜெய்சங்கர், தமிழ்க்கட்சிகளுடன் சந்திப்பை நடத்தியபோது அவர் இடைக்கால தீர்வு என்ற அடிப்படையில்,13வது திருத்த நடைமுறையை குறிப்பிட்டார்.
இந்நிலையில் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால், அது இலங்கையின் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டதற்கு சமனாகும்.
மேலும் தமிழ் மக்கள் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையிலான தீர்வையே வலியுறுத்துகின்றது.
இடைக்கால தீர்வு
இதனையடுத்தே 13இன் முழுமை நடைமுறையை, தமிழ்க்கட்சிகள் இடைக்கால தீர்வாக
கருதவேண்டும் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
இதனை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 13வது திருத்த நடைமுறையை, இடைக்கால தீர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எந்த இடத்தில் கூறவில்லை.
எனினும் இந்தியாவினால் 13வது அரசியலமைப்பு முழுமை நடைமுறையை வலியுறுத்தமுடியும் என இந்திய அமைச்சர் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பிரச்சினையை தீர்ப்பதற்கான மேலதிக செயற்பாடுகளை தென்னிலங்கையுடன் தமிழ்க்கட்சிகள் முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆதரவு
இதேவேளை சந்திப்பின் முடிவில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒரு அறிக்கையை வழங்கியுள்ளார் அதில், 13வது அரசியலமைப்புக்கு ஏன் எதிர்ப்பு காட்டப்படுகிறது என்பது அடங்கியிருந்தது.
இலங்கைக்கு அனைத்து உதவிகளும் தேவைப்படும் நேரத்தில், குறிப்பாக இந்தியா, இலங்கையில் உள்ள மற்ற எந்த நாட்டையும் விட அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
இலங்கையை மீட்க இந்தியா முன்வந்ததன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பலரது நன்மதிப்பை இந்தியாவினால் பெற முடிந்துள்ளது. எனவே ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள், இலங்கையின் எந்தவொரு முன்மொழிவையும் தமிழ் மக்கள் நிராகரிப்பதை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
