வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் இந்தியா!
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுத்து, வடக்கில் உள்ள தீவு சார்ந்த கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய்யை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
அக்ஷயபாத்ரா
இந்தியாவின் ‘அக்ஷயபாத்ரா’ மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் வடமாகாண மக்களைச் சென்றடைவதன் ஒரு பகுதியாக, அனலைதீவு மற்றும் எழுவைத்தீவு ஆகிய வடக்குத் தீவுகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டமைப்புகள் இந்திய மானியத்தைப் பெறுகின்றன.
20 லிட்டர் மண்ணெண்ணெய்
இதன்படி, ஒவ்வொரு கடற்றொழிலாளருக்கும் 20 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துாதரக அதிகாரி ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் நேற்று ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அண்மைய எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெய்யை வழங்குமாறு யாழ்ப்பாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு சங்கம், தூதரகம் ஊடாக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்தே இந்திய உதவி வழங்கப்பட்டுகிறது.





வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
