டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா

Sri Lanka Dengue Prevalence in Sri Lanka India Nalinda Jayatissa
By H. A. Roshan Aug 04, 2026 07:40 PM GMT
Report

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 500 லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வானது நேற்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.

தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு

தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு

இந்திய நிறுவனமான UPL Limited 

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் வழங்கிய அன்பளிப்பாக இந்த மருந்து இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனமான UPL Limited இந்த மருந்தை வழங்கியதுடன், கோரிக்கை விடுக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா | India S Support For Dengue Control Efforts

நெருக்கடி காலங்களில் முதன்முதலில் உதவி வழங்கும் நாடாக இந்தியா தொடர்ந்து செயல்படுவதை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் சுமார் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..

தொழில்நுட்ப மலத்தியோன்

இந்த தொழில்நுட்ப மலத்தியோன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பரவலான புகைமூட்டல் (Fogging) மற்றும் தெளிப்பு (Spraying) நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும்.

நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா | India S Support For Dengue Control Efforts

மேலும், இந்த மருந்துத் தொகுதியை விரைவாக வழங்குவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய இலங்கை சுகாதார அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் "Neighbourhood First" (அயல்நாடுகள் முதன்மை) கொள்கையின் கீழ் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான ஆதரவை இது பிரதிபலிக்கிறது. 

ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்

ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்

GalleryGallery

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US