விமர்சையாக இடம்பெறும் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்
இந்தியாவில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்துள்ள அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதி அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தேசியக் கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் மூலம் மலர்கள் துவப்பட்டன.
விழாவில் மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்திருந்தனர்.
வழக்கமாக செங்கோட்டையில் ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வர்.
ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக 350 கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேபோல், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் சார்பிலும் 75-வது சுதந்திர தின விழா நடைபெறுகின்றன. பல்வேறு நாடுகளில் உள்ள கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.









பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
