நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், இன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization) இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் சுமாா் 615 கோடியில் செலவில் உருவான சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் 3
புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம் திகதி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கி இருந்தது.
இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக இன்று (05.08.2023) சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இன்று மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை சந்திரயான் 3 நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான் 3 விண்கலம் நிறைவு செய்துள்ளது. அத்துடன், ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |