பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி
இலங்கையில் பெருந்தோட்டப் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான மானிய உதவியை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜெயசுந்தர ஆகியோர் இது தொடர்பான இராஜதந்திர கடிதங்களில் அண்மையில் கொழும்பில் வைத்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்படி, பெருந்தோட்டப் பிரதேசங்களில் 9 பாடசாலைகள் இந்திய அரசாங்கத்தின் மானிய ஆதரவை பெறவுள்ளன.
9 பெருந்தோட்டப் பாடசாலைகள்
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் நிதியுடன், திட்டத்திற்கான மொத்த அர்ப்பணிப்பு இப்போது 600 மில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த திட்டத்தின் ஊடாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பாடசாலையும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |