தமிழகத்தின் அறிவுமையமாகிய யாழ்ப்பாணம்! இந்திய தரப்பு புகழாரம்
இந்தியாவின் 76ஆவது குடியரசு தினமான இன்றைய தினம்(26) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம்(Jaffna) மருதடி விதியிலுள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார்.
குடியரசு தின வாழ்த்து
இதனைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் துணைத் தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் இந்திய மற்றும் இலங்கை மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள்
அதனை தொடர்ந்து, பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் Y A B M யஹம்பத் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் அமைதிப்படை எனும் பெயரில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தனர்.
அக்கால பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவிடம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது.
அங்கு சென்றே இந்திய துணைத்தூதுவர் தலைமையிலான இந்திய தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலதிக தகவல்: கஜிந்தன்
இதேவேளை, இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மலையகத்தில் வாழும் இந்திய குடும்பங்கள் உட்பட அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் பிரதிநிதிகள் மற்றும் அனுநாயக்கத் தேரர்கள், இந்து, இஸ்லாமிய சமய பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், கண்டி தமிழ் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.
செய்தி: திருமால்
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |