சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம் குறித்து இந்தியாவின் பதில்
தீவிரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை, நம்பும் வகையில் பாகிஸ்தான் நிறுத்தாத வரை, சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தை மீண்டும் தொடருமாறு
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதலும் இடம்பெற்றது.
இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்திருப்பதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் தொடருமாறு பாகிஸ்தான், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாரமாக இருக்கும் சிந்து நீரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவிடம், பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு இந்தியா பல தடவைகளாக பதில் வழங்கியிருந்ததது. எனினும் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் தமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதி
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இது தொடர்பில் கருத்துரைத்துள்ளார், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மீது பாகிஸ்தான் செலுத்தும் ஆதரவு குறைக்கப்பட வேண்டும்.
பெயரளவுக்கு இல்லாமல் அதை நம்பகத்தன்மையுடன் சாத்தியப்படுத்த வேண்டும். அது செய்யப்படாதவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடரப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
காஸ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை பாகிஸ்தான் விட்டுக்கொடுப்பதே, காஸ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே விடயமாகும்.
அந்த விவாதத்திற்கு இந்தியாவும்; தயாராக இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விவாதத்திற்கு வரலாம் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
