பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதி! குற்றசாட்டை மறுப்பு..
இலங்கைக்கு மனிதாபிமான உதவியை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா செவ்வாய்க்கிழமை (2) "அபத்தமானது" மற்றும் "தவறான தகவல்" எனக் கூறி நிராகரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், விமான அனுமதி கோரிக்கை டிசம்பர் 1 ஆம் திகதி பிற்பகல் 1:00 மணியளவில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கிடைத்ததாகக் கூறினார்.
கடுமையான வானிலை
இந்திய அரசாங்கம் இந்தக் கோரிக்கையை "விரைவாக" பரிசீலித்து, பாகிஸ்தான் சமர்ப்பித்த பயணத் திட்டத்தின்படி, அதே நாளில் மாலை 5:30க்கு அனுமதியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சு, விமானம் இந்தியாவிலிருந்து சரியான நேரத்தில் அனுமதி கிடைக்காததால் 60 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிட்டதாகவும், வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட அனுமதி "செயல்பாட்டு ரீதியாக சாத்தியமற்றது" என்றும் குற்றம் சாட்டியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்ததுடன், இலங்கை தற்போது கடுமையான வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுடெல்லி இலங்கைக்கு "கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும்" ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தது.
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri