இந்தியா பல்வேறு அழுத்தங்களை கொடுக்கின்றது - சிங்கள ராவய அமைப்பு
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தொடர்ந்தும் துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்திருப்பது என தீர்மானிக்கப்பட்ட பின்னர் இந்தியா பல்வேறு விதத்தில் அழுத்தங்களை கொடுத்து வருவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படியான அழுத்தங்களை கொடுக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் இந்தியா மற்றும் ஜப்பான் உடனான உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்றால், அது குறித்து தமக்கு அறிவித்திருக்க வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கத்துடனேயே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதே அன்றி நாட்டு மக்களுடன் அல்ல. இதனால் ஆட்சி மாறிய பின்னர் அந்த உடன்படிக்கையும் இரத்தாகி விடும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வரும் ஆட்சியாளர்களுக்கு குறுகிய கால அதிகாரமே இருக்கின்றது. தோல்வியடைந்து வீட்டுக்கு சென்ற பின்னர் அவை அனைத்து இரத்தாகி விடும்.
மக்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால், மக்கள் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தயாரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
