சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis India Economy of Sri Lanka
By Jera Jun 15, 2022 11:51 AM GMT
Report
Courtesy: ஜெரா

இன்று உலக காற்றாலை தினமாகும். (Global Wind Day). அண்மை நாட்களில் இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி, மாற்றுச் சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிநிலையால் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடையைத் தனிப்பதற்குப் இத்தகைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. இத்தகைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளுல் அதிகம் கவனத்தை ஈர்த்திருப்பவை காற்றாலைகள் ஆகும்.

காற்றிலிருந்து மின்சாரம்

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

சுழலும் காற்றினால் உருவாக்கப்படும் அசைவியக்க சக்தியினைக் கொண்டு மின்சாரத்தினை உற்பத்தி செய்யக் காற்று பயன்படுத்தப்படுகின்றது. காற்றினால் இயங்கும் 'டேர்பைன்களைப' பயன்படுத்தி அல்லது காற்றின் சக்தியினைச் சேமித்துப் பாதுகாக்கும் முறைமைகள் மூலம் இது மின்சார சக்தியாக நிலைமாற்றப்படுகின்றது.

முதலில் காற்று 'டேர்பைனின் தகடுகளை (Plates) தாக்குகின்றது. இதனால் தகடுகள் சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 'டேர்பைனை' சுழற்றுகின்றன. இது 'ஜெனரேட்டருடன்' பொருத்தப்பட்டுள்ள அச்சினை நகர்த்துவதன் மூலம் அசைவியக்க சக்தியினை சுழலும் சக்தியாக மாற்றுகின்றது. பின்னர் மின்காந்தவியல் மூலம் மின்சார சக்தி உருவாக்கப்படுகின்றது.

காற்றாலையின் வரலாறு

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

காற்றினால் இயங்கும் 'டேர்பைன்கள்' ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் முதன் முதலில் உருவாக்கப்பட்டன. 1830களில் மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்ய பொறியியலாளர்கள் காற்றின் சக்தியினைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

காற்றின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் நுட்பம் இங்கிலாந்தில் 1887 இலும், அமெரிக்காவில் 1888 இலும் தொடங்கியது. ஆனால் நவீன காற்றுச் சக்தி டென்மார்க்கிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. கிடையான அச்சில் இயங்கும் காற்று 'டேர்பைன்கள்' 1891 இல் உருவாக்கப்பட்டன.

இலங்கையில் காற்றாலை

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

இலங்கையில் 1988 ஆம் ஆண்டிலிருந்து காற்றாலை மின்சாரம் குறித்துப் பேசி வந்தாலும் 2003 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டது. வட மாகாணத்தில் பளை பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து காற்றாலைகளின் மூலமாக மின்சாரத்தினைப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

காற்றாலையும் மக்கள் எதிர்ப்பும்

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

பளையில் காற்றாலை அமைக்கப்படும் போது பெரியளவு மக்கள் அதனை எதிர்க்கவில்லை. 2018 ஆம் ஆண்டு யாழ்.நகருக்கு அண்மித்த மறவன்புலவு கடற்கரை பகுதியில் காற்றாலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதனை அப்பிரதேச மக்கள் எதிர்த்தனர். அதற்கான காரணங்களைப் பின்வருமாறு அப்பகுதி மக்கள் முன்வைத்தனர்.

தம்மிடம் அனுமதி பெறாமலேயே இப்பகுதியில் காற்றாலை அமைக்கப்படுகிறது, தமது காணிகள் பறிபோகப்போகின்றன, சுகாதார பிரச்சினைகள் வரக்கூடும் போன்றவற்றைக் குறிப்பிட்டனர்.

கடற்கரையானது ஆழம் குறைந்த, பாசிகள் - கடற்தாவரங்கள் வளரக்கூடிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது, இதில் மீன் முட்டையிட்டு பெருகக்கூடிய இயற்கையமைப்புகள் காணப்படுகின்றன.

24 மணிநேரமும் இயங்ககூடிய காற்றாலைகள் எழுப்பும் சத்தமும், நீரலைகள் மீது அது ஏற்படுத்தும் அதிர்வும் மீன்கள் கரையை நோக்கி வருவதைத் தடுக்கும். இதனால் இப்பகுதியில் மீன்வளம் அற்றுப்போகும். எமது பொருளாதாரம் பாதிக்கப்படும் - போன்ற காரணங்களை இப்பகுதி மீனவர்கள் முன்வைத்தனர்.

மன்னார் காற்றாலை மின் பூங்கா

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

கடந்த 2014 ஆம் ஆண்டு மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி பூங்கா, 2020 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் 'தம்பவன்னி' எனும்பெயரில் திறந்துவைக்கப்பட்டது. இந்த மின் உற்பத்தி பூங்காவிற்கும் மன்னார் மீனவர்கள் தம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

காற்றாலைகளின் சத்தமும், நீரின் மேல் அது எழுப்பும் அதிர்வும் மீன்வளத்தை அழித்துவிடும் என ஐயம் வெளியிட்டனர். மன்னார் காற்றாலை சர்ச்சை அண்மை நாட்களாகத் தெற்கில் ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோக்குவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலைக்கும் இந்த மன்னார் காற்றாலையே காரணமாக இருக்கிறது.

மன்னார் காற்றாலை மின் உற்பத்திப் பூங்காவை அதானி குழுமத்திற்கு வழங்கியமை தொடர்பான விசாரணைக்காக, முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர் முன் முன்னிலையாகிய முன்னாள் மின்சார சபைத் தலைவர், இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்திற்கு இணங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மன்னார் காற்றாலை மின் உற்பத்திப் பூங்காவை இந்திய அதானி குழுமத்திற்கு வழங்குமாறு தன்னைப் பணித்தார் - எனத் தெரிவித்திருந்தார்.

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

இதனை உடனடியாக தனது ருவீற்றர் தளத்தில் மறுத்திருந்த ஜனாதிபதி, "Re a statement made by the #lka CEB Chairman at a COPE committee hearing regarding the award of a Wind Power Project in Mannar, I categorically deny authorisation to award this project to any specific person or entity. I trust responsible communication in this regard will follow." எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விசாரணையின் பின்னர் வந்த இரு தினங்களுக்குள் முன்னாள் மின்சார சபைத் தலைவர் ஊடகங்கள் முன்னிலையில் தடுமாறினார். தான் முயற்சியாண்மைக்கான பாராளுன்ற விசாரணைக்குழு முன் கூறியது தவறான தகவல் என்றார். ‘அதானிக்கு மன்னாரில் காற்றாலை மின்திட்டம் வழங்கும்படி மோடி, கோட்டபாயவுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கோப் குழு முன்னிலையில் கூறியது பொய். சற்று உணர்ச்சிவசப்பட்டு அப்படிக் கூறிவிட்டேன்", "பசிக் களைப்பு மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் அவ்வாறு கூறிவிட்டேன்" - என்றெல்லாம் பிதற்றி, இறுதியில் தன்வசமிருந்த மின்சார சபைத் தலைவர் பதவியையும் 'தனிப்பட்ட காரணங்களுக்காக' ராஜினாமா செய்தார்.

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

குழுவின் பலவீனம்

முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றக் குழுவின் பலவீனமே இதுதான். அரச துறையில் ஏற்படுத்தப்படும் எவ்விதமான ஊழலையும் அதனால் விசாரிக்க முடியும். ஆனால் அதனால் தீர்ப்புச் சொல்லவோ, முன் பின் முரணான தகவல்களைக் கூறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது.

அரசியல்வாதிகளும், பலமுள்ள அதிகாரிகளும் மேற்கொள்ளும் ஊழல்களை, அதிகாரத் துஷ்பிரயோகங்களைக் காப்பாற்றும் எல்லை வரைக்குமே அதனால் செயற்பட முடிகிறது. அது மக்கள் முன்னிலையில் பலமுள்ளவர்களை அம்பலப்படுத்தியதும் கிடையாது. இந்த விசாரணையின் போது கூட மன்னார் காற்றாலை பூங்கா எவ்வித கேள்விப்பத்திரங்களுமின்றி அதானி குழுமத்திற்கு எப்படி வழங்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

யானையைப் பிடிக்கப் புறப்பட்டு சுண்டெலியோடு வந்த கதையாக, மின்சார சபைத் தலைவரின் பதவியிழப்போடு மெளனித்திருக்கிறது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற விசாரணைக்குழு.

இலங்கையில் அதானி குழுமம்

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

இவ்விடத்தில் அதானி குழுமத்தின் இலங்கை வருகை குறித்தும் அவதானிக்கப்படல் வேண்டும். ராஜபக்சக்களின் மீள்வருகையுடனேயே இலங்கை அரசியலில் அதானிகுழுமத்தின் பெயர் அதிகம் அடிபட்டது. இந்திய அரசியலை மொத்தமாகவும், மாநில அரசியலை சில்லறையாகவும் குத்தகைக்கு எடுத்துவிட்ட தென்னாசியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான அதானி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் சில பகுதிகளை அபிவிருத்திக்காகக் கோரிநின்றது. ஆயினும் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையமே அதானிக்குக் கிடைத்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் இலங்கை வந்திருந்த அதானி ஜனாதிபதியை சந்தித்து, கொழும்பு துறைமுக விவகாரம், மின் உற்பத்தித் திட்டம் குறித்து உரையாடினார். அத்தோடு நின்றுவிடாமல் தன் சொந்த உலங்கு வானூர்தியில் வந்து மன்னாரைப் பார்வையிட்டார்.

அதாவது முதலாளி தன் பண்ணையைப் பார்க்கத் 'திடீர் விசிற்' அடிப்பதைப்போல வந்திருந்தார். ராஜதந்திர அந்தஸ்தற்ற ஒரு பெரும் வணிகரின் ஏகபோகமான இவ்வருகையை வேறு எவ்வகையிலும் வர்ணிக்க முடியாது. எனவே அதானி குழுமத்திற்கு மன்னார் மீது ஒரு கண் இருக்கின்றமை இதன் ஊடாகப் புலனாகின்றதல்லவா?

மன்னாரும் இந்தியாவும்

சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாரை பார்வையிட்ட அதானி! கழுகுப் பார்வைக்குள் தமிழர் பகுதி - காற்றிலும் அரசியல் செய்யும் இந்தியா | India Political Game Sri Lanka Economic Crisis

மறுபுறமாக மன்னாரையும் இந்தியாவையும் இணைக்கும் ராமர் பாலத்தை இந்திய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில்வழக்கொன்றையும் தொடர்ந்திருக்கிறார். இது மன்னாருக்கு மிக அண்மையான கடல் பகுதிகளையும் வளங்களையும் சட்டரீதியாக இந்தியாவோடு சேர்க்கும் முயற்சியாகும். அத்துடன் திருக்கேதீஸ்வர ஆலயத்தை வைத்து இந்து - கிறிஸ்தவ முரண்களுக்கு நன்றாகவே எண்ணெய் வார்க்கப்படுகின்றது.

நீறுபூத்த நெருப்பு நிலையை அடைந்திருக்கும் இவ்விவகாரமானது இன விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் அரசியலையும் மதவாதத்தின் பின்னால் இழுத்துச் செல்லும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது.

வரலாற்றுக்கு முன்பிருந்தே பண்பாடு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தமிழகத்தோடு மிக நெருங்கிய உறவை மன்னார் கொண்டிருக்கிறதே தவிர, இந்தியாவோடு அல்ல. ஆனால் இப்போது மன்னாரை முன் வைத்து மேற்கொள்ளப்படும் சதி அரசியலானது தமிழர்களின் வளமிகு மேற்கு கடல் முனையமான மன்னாரை அரசியல்ரீதியாக இந்தியாவோடு இணைக்கும் முயற்சி. அதற்காகக் காற்றைக்கூட இந்தியா விட்டுவைக்கவில்லை.

ஈழ தேசம் மீது வீசும் காற்றையும் அரசியலாக்கியிருக்கிறது இந்தியா. ஈழம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பகுதியை குறிக்க மட்டும் பயன்படுத்தும் சொல் அல்ல. இலங்கைத் தீவு இந்தியாவின் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு உட்பட முன்பே முழு இலங்கையையும் குறிக்கப் பயன்பட்ட சொல் ஈழம் எனக் கொள்க.


இக் கட்டுரை எழுத்தாளர் ஜெரா என்பவரால் எழுதப்பட்டு 15.06.2022 அன்று தமிழ் வின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது. கட்டுரை தொடர்பில் உங்கள் கருத்துக்களை முறைப்பாட்டுப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம்.


மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US