இரவில் நடந்த திடீர் தாக்குதல்! இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அடங்காத சத்தம்
இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் விடிய விடிய தாக்குதல் தொடர்ந்ததாகவும் தொடர்ந்து வெடிகுண்டு சத்தம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
நேற்றிரவு பாகிஸ்தான் இராணுவம் திடீரென அத்துமீறித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பரபரப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீர் முதல் பல எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் இந்தியாவும் பாகிஸ்தானின் பல எல்லைகளில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
அத்துடன் லாகூரில் நடக்கும் தாக்குதல்கள் காரணமாக பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
