முன்னாள் போராளிகளின் தாக்குதல் முயற்சி தகவல்! இந்தியாவிடம் தகவல் கோரும் இலங்கை!
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக, இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் விபரங்களை கோரியுள்ளது.
இலங்கையில் மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி 2022ஆம் ஆண்டு மே 13ஆம் திகதியன்று தெ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தகவல் குறித்து, இந்திய புலனாய்வுப் பிரிவினர், விசாரணை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிப்பார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தகவல்களும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
அதேநேரம், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
