13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது:சம்பந்தன்
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது."என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது
[2AUJT ]
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், அந்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் இனவாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர கூறும் கருத்துக்களைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும். அவர்களின் விசமத்தனமான கருத்துக்கள் இப்போது வேகாது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு
எம்முடன் ஜெய்சங்கர் நடத்திய பேச்சின் போதும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
ஜெய்சங்கரின் பயணத்தின் பின்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி வாயால்
மாத்திரம் கருத்துக்களை வெளியிடாமல் அதனைச் செயலிலும் காட்டவேண்டும்" என கூறியுள்ளார்.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
