ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video)
இந்திய வல்லரசு, தமிழர்கள் மீது கொடுமைகளை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், மிகப்பெரும் தவறுகளை செய்தமைக்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அன்னை பூபதியம்மாவின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் (18.04.2023) யாழில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுடர்விட்டு எரிந்த விடுதலை
மேலும் அவர் கூறியதாவது, உலகத்துக்கே அகிம்சையைப் போதித்துக் கொண்டதாக இருக்கின்ற இந்திய வல்லாதிக்கம் 56 வயதுடைய தாய் வல்லரசிடம் இந்திய அமைதிப்படை படுகொலையை நிறுத்தவேண்டும் என நீதிகேட்டு 31 தினங்கள் உணவு உட்கொள்ளாது நோன்பு இருந்தார்.
அப்போது அவருடைய கோரிக்கையைப் புதுடெல்லி பார்த்துக் கொண்டிருந்தது அதனால் அன்னையின் உயிரை நாங்கள் இழக்கவேண்டி இருந்தது.
இவ்வாறு எமது தமிழ் மக்களுக்காக இழந்த தாயை நினைவு கூர்வது வெறுமனவே இறந்துபோன ஒருவருக்குக் கற்பூரத்தை வைத்து கொழுத்திவிட்டு சென்று விடுவதற்காக அல்ல மாறாகப் போராட்டம் ஆரம்பித்தபோது அவரிடம் இருந்து சுடர்விட்டு எரிந்த விடுதலை உணர்வினை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்து முன்னெடுக்கின்றோம்.
தனிநாடு உருவாக்கி தருவோம்
ஆனால், வெறுமனவே விளக்கேற்றி மௌனமாகச் செல்லவேண்டும் என இந்திய எடுபிடிகள் கூவிக்கொண்டு வருகின்றனர். அதற்கான காரணம் இந்தியா செய்த வரலாற்றுத் துரோகத்தையும் இலங்கை அரசு செய்த வரலாற்றுத் துரோகத்தையும் கொடுமைகளையும் மறைப்பதற்காக அவ்வாறான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது.
அதேபோல, கடந்த காலத்தில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலில் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டது ஏனென்றால் திலீபனை சாவடிப்பதில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது அது மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. எனவே, உண்மையில் இந்த நினைவேந்தல் ஊடாக இளம் தலைமுறைக்கு இந்த வரலாற்றுப் பணியைக் கொண்டு செல்கின்றோம்.
இந்திய வல்லரசு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கி தருவோம் என்று கூறினர்.
13ஆவது திருத்தச் சட்டம்
ஆனால், இந்திய அரசு எமது மண்ணுக்கு வந்து உரிமைகளை பெற்று தராதது மட்டுமல்ல எங்கள் மீது கொடுமைகளை அரங்கேற்றியிருக்கின்றது.
அன்னை பூபதியம்மா உயிர்நீத்து 35ஆவது வருடங்கள் சென்றும் இன்று கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையாக இருக்கின்ற ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவேண்டும் எனத் தமிழ் மக்களின் தலைமைகளைக் கொன்றே பேசவைக்கின்ற ஒரு துயரமான நிலமை இருந்து கொண்டிருக்கின்றது இந்த உண்மைகளை எங்கள் மக்களும் இளம் சமூகமும் புரிந்து கொள்ளவேண்டும்.
பயணம் தொடரும்
இந்தியா தமிழர்கள் மீது 13 முயற்சிக்கின்ற விடயங்களை கைவிட வேண்டும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஒற்றையாட்சி முறையை ஒழிப்பதற்கும் தமிழ்த் தேசம் சுயநிர்ணய உரிமையை அங்கீகாரம் செய்வதற்கான ஒரு சமஷ்டி முறைமையைக் கொண்டுவர இலங்கை மீது இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்.
எனவே, நாங்கள் ஒரு தமிழ் இனமாக இந்த தாய் மீது சத்தியம் செய்கின்றோம் அந்த தாய் எந்த இலட்சியத்துக்காகப் போராடினாரே அந்த இலட்சியத்தை அடைகின்ற வரைக்கும் எங்களுடைய பயணம் தொடரும், ஒரு போதும் இந்த இலட்சியத்தைக் கைவிடமாட்டோம், ஒரு போதும் ஒற்றையாட்சிக்குள் எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எனவே இந்த இலட்சியத்துக்காகத் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)