நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் எதிர்பார்த்தது போலவே தோல்வியில் முடிந்துள்ளது.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எனினும் அரசு அதனை நிராகரித்ததால் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் கடந்த 3 நாட்களாக விவாதம் நடைபெற்றது.
தோல்வி அடைந்த நம்பிக்கையில்லா தீர்மானம்
இதில் காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி ஜோதிர், ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி உரைக்கு மத்தியில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் குரல் வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதனையடுத்து மோடி அரசுக்கு கொண்டு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam