மோடியின் கச்சதீவு கருத்து: இலங்கை அரசியலுக்கு விடுக்கப்பட்ட மற்றுமொரு சவால்(Video)
இந்தியாவில் பா.ஜ.க அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இந்திய பிரதமர் நரந்தர மோடிக்கு எழுந்த புதிய அழுத்தமாக மாறியுள்ளது.
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட நரேந்திர மோடி, 1974 ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு வழங்கி இந்தியாவை துண்டாடும் செயற்பாட்டை இந்திராகாந்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவை துண்டாட மோடி செயற்படுவதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போதே மோடி இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இதன்படி மோடி இந்திய நாடாளுமன்றத்தில் மேற்கண்டவாறு தெரிவித்த விடயம் இலங்கை அரசியலுக்கு விடுக்கப்பட்ட மற்றுமொரு சவாலாக பார்க்கப்படுகிறது.
இதற்கமைய இந்திய - இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக எழும் அரசியல் நகர்வுகள் அனைத்தும் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்த நகர்வுகள்க பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட இலங்கை மற்றும் உலக அரசியல் நகர்வுகளை ஒரே பார்வையின் கீழ் கொண்டு வருகிறது இன்றைய செய்திவீச்சு