இந்தியா - மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்
இந்தியாவின் மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ் 69 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தில் உள்ளார். செர்ச்சிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வன்லத்லுங்கா 55.6 கோடி ரூபாய் சொத்துகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
மாநில சட்டசபைக்கு தேர்தல்
மேலும், சம்பாய் வடக்கு தொகுதியில் மிசோரம் மக்கள் இயக்க வேட்பாளராக போட்டியிடும் ஜின்ஜாலா 36.9 கோடி ரூபாய் சொத்துகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், நவம்பர் 7 ஆம் திகதியன்று மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற உள்ளது.
அத்துடன், டிசம்பர் 3 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.