எரிபொருளை கடனாக வழங்கிய இந்தியா(Photo)
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தியா ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் எரிபொருளை கடனாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் உதவி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்றைய தினம் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பான ட்விட்டர் செய்தியொன்றையும் வௌியிட்டுள்ளது.
இலங்கையை வலுவூட்டல்! இந்திய உதவியின்கீழ் வழங்கப்பட்ட 40000 மெட்ரிக்தொன் டீசல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
— India in Sri Lanka (@IndiainSL) May 31, 2022
இந்திய தூதரகத்தின் செய்தி
தற்போதைய எரிபொருள் நெருக்கடியை தணிக்கும் வகையில் இந்தியா ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவூட்டும் செயற்திட்டத்தின் கீழ் இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.



