அநுர - ரணிலுக்கு எதிராக களத்தில் குதித்த இந்தியா
இலங்கை அரசியல் என்பது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என்பதையும் தாண்டி, இந்தியாவின் ஆட்சிக்கு பெரும் பங்குதாரராகவும் காணப்படுகிறது.
இந்தியாவிற்கு பூகோள ரீதியில் அண்டை நாடக காணப்படும் இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது.
குறித்த தேர்தலில் வரும் ஆட்சியாளர் இந்தியாவிற்கு சாதகமானவராக இருக்கவேண்டும் என்பது அவர்களில் நிலைப்பாடு.
இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகர் தொடக்கம் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் வரை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் பெரும் நிலைப்பாடுகள் இந்தியா சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன..
அந்த வகையில், இவ்வாறான கருத்துக்களை அடிப்படையாக கொண்டு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் அநுரவையும், ரணிலையும் வெளியேற்ற இந்தியா காய் நகர்த்துவதாக கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் இருவரையும் வீழ்த்தி சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைப்பதே அவர்களில் இலக்கு எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வேட்பாளர்களின் நிலை தொடர்பிலும் அதில் இந்தியாவின் வகிப்பகம் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |