யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியா எப்போதும் தயார்! அமைச்சருக்கு சிறீதரன் பதிலடி

Parliament of Sri Lanka Nimal Siripala De Silva S. Sritharan India
By Rakesh Sep 23, 2022 06:29 AM GMT
Report

யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியாவும், இந்தியன் விமான நிறுவனங்களும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இலங்கை அரசாங்கமே சலுகைகளை வழங்காமல் இருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்து

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த விரும்பும் இந்திய விமானங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குகின்றது. ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் நேற்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியா எப்போதும் தயார்! அமைச்சருக்கு சிறீதரன் பதிலடி | India Is Always Ready Sridharan

இதற்கு பதிலளிக்கும்போதே சிறீதரன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் விமானம் வரும் என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால், விமானம் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

இந்திய விமான சேவையுடன் கதைக்க வலியுறுத்தல்

உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியா எப்போதும் தயார்! அமைச்சருக்கு சிறீதரன் பதிலடி | India Is Always Ready Sridharan

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள்.

முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால், எந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US