Strait of Hormuzஇல் சிக்கியுள்ள இந்திய கப்பல்கள்.. மீட்டெடுக்க தீவிர நடவடிக்கையில் இந்தியா
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து தடைகள் குறைந்து வருவதாக இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“நான் தற்போது அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த உரையாடல்கள் சில பலன்களை அளித்துள்ளன,” என்று அவர் கூறினார்.
ஆனால், Strait of Hormuz வழியாக அனைத்து இந்தியக் கப்பல்களும் செல்ல அனுமதிக்கும் வகையில் முழுமையான ஒப்பந்தம் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தையடுத்து இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு எரிவாயு கப்பல்கள் சனிக்கிழமை அந்த நீரிணையை கடந்தன.
Strait of Hormuz
இருப்பினும், மேலும் 22 இந்தியக் கப்பல்கள் அப்பகுதியில் செல்ல அனுமதி பெற காத்திருக்கின்றன. வளைகுடா பகுதியில் மோதல் தீவிரமடைந்த பின்னணியில் இந்த நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெப்ரவரி 28ஆம் திகதி விரிவான தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிரகரித்தது.
இதன் பின்னர் ஈரான், பெர்ஷியன் நீரிணை மற்றும் அரேபிய கடல் இடையே இணைப்பாக உள்ள Strait of Hormuz வழியாகக் கப்பல் போக்குவரத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்த நீரிணை இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியின் சுமார் 40–50 சதவீதம் இந்தப் பாதை வழியாக வருகிறது. அதேபோல் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியின் பாதியளவும் மற்றும் பெரும்பாலான LPG அனுப்புமதிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.