கருப்பு ஜூலை நிகழ்வில் அடாவடி: இந்தியாவின் பார்வையில் ரணிலின் நகர்வுகள்(Video)
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை மறவோம் என்ற வாசகம் கூட, நாட்டில் உள்ள பெரும்பான்மை கடும்போக்குவாதிகளை கோபமடைய செய்யும் நிலையில் தான், நல்லிணக்கம் என்ற வார்த்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் தலைநகர் கொழும்பில் நேற்று(23.07.2023) நினைவுகூரப்பட்ட கருப்பு ஜூலை நிகழ்வில், சில பெரும்பான்மையின கடும்போக்குவாதிகளால் இன நல்லிணக்கமற்ற கருத்துக்களும் கோஷங்களும் எழுப்பப்பட்டு நினைவஞ்சலிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயேதான் இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கவும், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்கும் நோக்குடனும் எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வகட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அணைத்து அரசாங்க தரப்பினருக்கும் அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கான ரணிலின் விஜயத்தில் 13 ஆம் சீர்திருத்தம் என்பது இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தமாக திணிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், ரணில், மோடி இணைந்தவாறு கூட்டு ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் 13 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம் வழங்கவேண்டும் என மோடி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்தான் இலங்கையில் தற்போது இன பாகுபாடுக்கான எதிர்ப்புகள் பெரும்பான்மை இனத்தவர்களால் வெளிப்பட ஆரம்பித்துள்ளன...
இவ்வாறான இலங்கை மற்றும் உலக அரசியலில் காணப்படும் வெளிப்படாத உண்மைகளை உங்கள்முன் வெளிப்படுத்துகிறது இன்றைய செய்திவீச்சு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
