இலங்கைக்கு ஐ.எம்.எப் வழங்கிய கடன் தொடர்பில் இந்தியா மகிழ்ச்சி
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள பிணையெடுப்பு குறித்து இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இந்த பிணையெடுப்பு இலங்கையின் பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவும் என்றும் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள்
இந்தநிலையில் எதிர்வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் எந்தவொரு தரப்புக்குக்கும் பக்கசார்பற்ற வகையில், வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்புக்கான வழியை இந்தியாவே
ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிவித்த அவர், முதலாவதாக கடன் மறுசீரமைப்புக்கு
இந்தியாவே உடன்பட்டது என்பதையும் நினைவுப்படுத்தியுள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
