பாகிஸ்தானை விட அதிக அணுவாயுதங்களை வைத்திருக்கும் இந்தியா: வெளியான சர்வதேச அறிக்கை
இந்தியா (India), பாகிஸ்தான் (Pakistan), சீனா (China) உட்பட ஒன்பது அணு ஆயுத நாடுகள், அணு ஆயுத நவீனமயமாக்கலையும் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டொக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Stockholm International Peace Research Institute) நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 410 அணு ஆயுதங்களை கொண்டிருந்த சீனா, 2024 ஜனவரியில் அந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தியுள்ளது.
அணுசக்தி விநியோக அமைப்புகள்
இந்நிலையில், இந்தியா தற்போது 172 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அதேவேளை, பாகிஸ்தான் 170 அணுவாயுதங்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு நாடுகளும் புதிய அணுசக்தி விநியோக அமைப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.
மேலும், உலகின் பெரும்பாலான அணு ஆயுதங்களில் 90 வீதமானவை ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இரண்டு நாடுகளும், பல நாடுகளுடன் சேர்ந்து, 2023ஆம் ஆண்டில் புதிய அணுசக்தி திறன் கொண்ட ஆயுத அமைப்புகளை நிறுவியுள்ளன.
இதன்படி, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து, சுமார் 2,100 அணு ஆயுதங்கள் அதிக எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |